இந்திய வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு குறிப்பிடத்தக்க வட்டியை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி போஸ்ட் ஆபிஸிலும் டைம் டெபாசிட் திட்டங்கள் கிடைக்கின்றன.
இதற்குப் போட்டியாக ஸ்மால் வங்கிகள் களம் இறங்கியுள்ளன. இந்த வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ்
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 4.5 சதவீதத்தில் இருந்து வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கி மூத்தக் குடிமக்களுக்கு 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
மேலும் 1001 நாள்கள் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்தப் புதிய விகிதங்கள் மே 2 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், 700 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9% வட்டியும் கிடைக்கும்.
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய FD விகிதங்கள் 27 பிப்ரவரி 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. ங்கி மூத்த குடிமக்களுக்கு 4.75% முதல் 9% வரையிலான வட்டி விகிதங்களுடன் நிலையான கால வைப்புகளை வழங்குகிறது.
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது இப்போது பொதுக் குடிமக்களுக்கு 3% முதல் 8.4% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.60% முதல் 9.01% வரையிலும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்கும்.
1000 நாட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9.01% வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் மார்ச் 24, 2023 முதல் பொருந்தும்.
எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3.00% முதல் 7.10% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் 3.50% மற்றும் 7.60% வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“