Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி; இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க

ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி, ஸ்மால் வங்கி பட்டியலைப் பார்க்கலாம்.

author-image
WebDesk
May 04, 2023 10:45 IST
These banks have hiked FD rates in May 2023

மே 2023 இல் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய சில வங்கிகள் உள்ளன.

இந்திய வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு குறிப்பிடத்தக்க வட்டியை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி போஸ்ட் ஆபிஸிலும் டைம் டெபாசிட் திட்டங்கள் கிடைக்கின்றன.

இதற்குப் போட்டியாக ஸ்மால் வங்கிகள் களம் இறங்கியுள்ளன. இந்த வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன.

Advertisment

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ்

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 4.5 சதவீதத்தில் இருந்து வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கி மூத்தக் குடிமக்களுக்கு 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

மேலும் 1001 நாள்கள் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்தப் புதிய விகிதங்கள் மே 2 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், 700 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு அதிகபட்சமாக 8.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9% வட்டியும் கிடைக்கும்.

வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய FD விகிதங்கள் 27 பிப்ரவரி 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. ங்கி மூத்த குடிமக்களுக்கு 4.75% முதல் 9% வரையிலான வட்டி விகிதங்களுடன் நிலையான கால வைப்புகளை வழங்குகிறது.

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது இப்போது பொதுக் குடிமக்களுக்கு 3% முதல் 8.4% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.60% முதல் 9.01% வரையிலும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்கும்.

1000 நாட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9.01% வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் மார்ச் 24, 2023 முதல் பொருந்தும்.

எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ

எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 3.00% முதல் 7.10% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் 3.50% மற்றும் 7.60% வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Fixed Deposits #Icici Bank #Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment