fixed-deposits | recurring-deposit-account | சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கேற்ப அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொண்டுள்ளன.
இந்த முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அஞ்சலகத் திட்டங்களும் பல்வேறு வகையான கவர்ச்சிகர வட்டி விகிதங்களுடன் வருகின்றன.
மேலும் ஒவ்வொரு காலாண்டின் போதும் மத்திய அரசு அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களை திருத்தி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களில் சேமிக்க பெரிதும் விரும்புகின்றனர். மேலும் இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு வரி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
தற்போது அஞ்சலக பிக்சட் டெபாசிட் மற்றும் ஆர்.டி திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் எஃப் vs ஆர்.டி
போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் வெவ்வேறு காலங்களுக்கு 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக இருக்கும். தபால் அலுவலக RD க்கு, வட்டி விகிதம் காலாண்டுக்கு 6.7 சதவீதம் ஆகும்.
தபால் அலுவலக RD திட்டத்தில் மாதாந்திர வைப்புத்தொகைக்கான குறைந்தபட்சத் தொகை ரூ 100 ஆகும். தபால் அலுவலக RD இன் முதிர்வு கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் ஆகும். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
மறுபுறம், போஸ்ட் ஆஃபீஸ் ஃபிக்ஸட் டெபாசி்ட திட்டங்கள் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என வருகிறது.
தற்போது, போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் 1 லட்ச ரூபாய் முதலீடு 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும் என்பதையும், ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்தை ஆர்டியில் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
1 ஆண்டு அஞ்சல் அலுவலக FD
ஒரு வருடத்திற்கு போஸ்ட் ஆபிஸ் எஃப்டியில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படும். ஒரு வருடத்திற்குப் பிறகு, உங்களுக்கு ரூ. 7,081 வட்டி கிடைக்கும், மேலும் உங்கள் மொத்த வருமானம் ரூ. 1,07,081 ஆக கிடைக்கும்.
2 ஆண்டுகள் எஃப்டி
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்கு வட்டியாக ரூ.14,888 மற்றும் மொத்த வருமானம் ரூ.1,14,888 கிடைக்கும்.
3 ஆண்டு எஃப்டி
உங்களுக்கு 23,508 ரூபாய் வட்டி கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் மொத்தம் ரூ.1,23,508 திரும்பப் பெறுவீர்கள்.
5 ஆண்டு FD
5 ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி பெற்றால், 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.
நீங்கள் 5 ஆண்டுகளில் ரூ.44,995 வட்டியைப் பெறுவீர்கள், மேலும் அந்த காலக்கட்டத்தில் உங்கள் மொத்த வருமானம் ரூ.1,44,995 ஆக இருக்கும்.
5 ஆண்டு ஆர்.டி வருமானம்
இப்போது ஐந்தாண்டுகளில் ரூ.1 லட்சத்தை ஆர்.டியில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும், 60 மாதங்களுக்கு ரூ.1666.66 முதலீடு செய்ய வேண்டும்.
60 மாதங்களில், நீங்கள் பெறும் மொத்த வட்டி 6.7 சதவீதத்தில் ரூ. 18,943 ஆகவும், உங்கள் மொத்த வருமானம் ரூ. 1.19 லட்சமாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“