LIC Scheme: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உங்களுக்காக பல வழிகளில் திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது. இன்று நாம் பார்க்க போகும் திட்டம் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது ஆகும்.
எல்.ஐ.சி. ஆதார் ஷீலா
அந்த வகையில், எல்.ஐ.சி.,யின் ஆதார் ஷீலா பாலிசியின் கீழ், தினமும் ரூ.51 சேமித்து முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பெரும் தொகை கிடைக்கும்.
இது மட்டுமின்றி, எல்ஐசியின் திட்டங்கள் முற்றிலும் ஆபத்து இல்லாதவை. ஏனெனில் இந்த திட்டம் முற்றிலும் பழமையான முதலீட்டு முறையாகும். ஆகையால் பங்குச் சந்தைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
திட்டத்தைப் பெறுவதற்கான தகுதிகள் என்ன?
8 வயது சிறுமி முதல் 55 வயது வரையுள்ள பெண்கள் இந்த ஆதார் ஷீலா திட்டத்தில் இணையலாம்.
முதலீட்டாளருக்கு குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாய் காப்பீடும் வழங்கப்படுகிறது. இது தவிர, பாலிசிதாரர் முதிர்வுக்கு முன் இறந்துவிட்டால், அதன் முழுப் பலனும் நாமினிக்கே வழங்கப்படும்.
ரூ.3,60 ஆயிரம் பெறுவது எப்படி?
55 வயதுடைய பெண் 15 வருட காலத் திட்டம் மற்றும் 30,00,00 தொகைக்கான காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுத்தால். 15 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.51 செலுத்த வேண்டும்.
இதன் மூலம் அவர் மொத்தம் ரூ.277141 செலுத்தி இருப்பார். இந்த நிலையில், முதிர்வு காலம் முடிந்ததும் அவருக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்கும்.
கடன் பெறும் வசதி
எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டத்தில் முதலீட்டாளர் கடன் பெறும் வசதியும் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/