LIC Jeevan Labh Policy: இன்றைய காலகட்டத்தில் கவனமான முதலீடு தேவைப்படுகிறது. எங்கு எதில் முதலீடு செய்வது என்பது மலையேற்றம் செய்வது போன்றது.
மிகுந்த கவனம் தேவை. இல்லையென்றால் நமது எதிர்ப்பார்ப்பு பூர்த்தியடையாமல் கூட போகலாம். இந்தப் பயத்தை போக்கும் விதமாக எல்.ஐ.சி., ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் ஜீவன் லாப் என்ற திட்டம் அமலில் உள்ளது.
இந்தத் திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.233 வீதம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.17 லட்சம் வரை பெற முடியும். இந்தத் திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
முதலில் இந்தத் திட்டம் உங்களது முதலீடுக்கு காப்பீடு பாதுகாப்பு மற்றும் லாபம் ஆகியவற்றை வழங்கியது. சந்தை ஏறினாலும் இறங்கினாலும் உங்களது முதலீட்டை பாதிக்காது.
இந்தத் திட்டத்தில் 8 வயது முதல் 59 வயது வரை இணையலாம். ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். திட்டத்தின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள் ஆகும்.
இந்தத் திட்டத்தில் அதிகப்பட்ச முதலீடு குறித்து எந்த வரம்பும் இல்லை. 3 ஆண்டுகளுக்கு பின்னர் கடன் (லோன்) பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பாலிசிதாரர் முதிர்வுக்கு முன்னர் மரணித்துவிட்டால் அவரது சட்டப்பூர்வ நாமினிக்கு முதிர்வு தொகை செல்லும்.
திட்டத்தின் முதிர்வு காலத்தில் பாலிசிதாரருக்கு ரூ.17 லட்சம் வரை கிடைக்கும். சிறு சேமிப்புடன் காப்பீடு விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“