இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, எல்ஐசி கன்யாடன் பாலிசி என்ற சேமிப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு நிதி நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் தந்தையின் மரணத்திற்குப் பிந்தைய நன்மைகளை மகளுக்கு வழங்குகிறது. இது குடும்பத்திற்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கடினமான காலங்களில் உதவுகிறது.
இந்தத் திட்டத்தின் காலம் 25 ஆண்டுகள் ஆகும். காப்பீட்டுக்கான குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள் ஆகும். மேலும், குழந்தையின் தந்தையின் வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.
திட்டத்தின் சிறப்புகள்
- ஒருவேளை தந்தை இறந்துவிட்டால் அதன் பின்னர் பிரீமியம் செலுத்த வேண்டாம். குடும்பத்தின் நலன் கருதி எல்ஐசி மீதமுன்ள பிரிமீயங்களை செலுத்தும்.
- ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீடு
- விபத்து அல்லாத வழக்குகளில் ரூ.5 லட்சம் வரை உடனடி உதவி
- முதிர்வின்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் பெறலாம்.
- நாளொன்றுக்கு ரூ.75 வீதம் சேமித்தால் முதிர்வின்போது ரூ.14.5 லட்சம் பெறலாம்.
- நாளொன்றுக்கு ரூ.131 வீதம் சேமித்தால் முதிர்வின்போது ரூ.31 லட்சம் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“