Advertisment

மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு; ரூ.5,41,497 ரிட்டன்: எல்.ஐ.சி ஃபண்டு தெரியுமா?

LIC MF Infrastructure Fund | ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில், மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நல்ல வருவாயை அளிக்கின்றன.

author-image
WebDesk
New Update
mutual funds, mutual fund tips, மியூச்சுவல் ஃபண்ட்

இந்தத் திட்டம் மார்ச் 24, 2008 அன்று தொடங்கப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

LIC MF Infrastructure Fund | Mutual Fund | ஒவ்வொரு நாளும் சிறிய மற்றும் நிலையான முயற்சிகள் பெரிய வெற்றிகளை தரும். . இது முதலீடு உட்பட நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்.

இதனால், அதிகபட்ச வருவாயை உறுதியளிக்கும் முதலீட்டு கருவிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை, நீண்ட காலத்திற்கு ஒருவரின் செல்வத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Advertisment

நீண்ட கால மூலதன வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ளக்கூடிய ஒரு முதலீட்டு நிதி எல்ஐசி எம்எஃப் உள்கட்டமைப்பு நிதி ஆகும்.

இது உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி திட்டமாகும். இந்தத் திட்டம் மார்ச் 24, 2008 அன்று தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில், ரூ.5,000 மாதாந்திர எஸ்.ஐ.பி (SIP) ஆனது ஒரு வருடத்தில் ரூ.70,753 ஆகவும், மூன்று ஆண்டுகளில் ரூ.2,62,288 ஆகவும், ஐந்தாண்டு காலக்கட்டத்தில் ரூ.5,41,494 ஆகவும் இருந்திருக்கும் என்று தரவு காட்டுகிறது.

இதற்கிடையில், ரூ.20,000 ஒருமுறை செலுத்தினால் ஒரு வருடத்தில் ரூ.34,090 ஆகவும், மூன்று ஆண்டுகளில் ரூ.49,734 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் ரூ.59,154 ஆகவும் இருந்திருக்கும்.

இந்தத் திட்டத்தில், மார்ச் 31, 2024 நிலவரப்படி ஏயூஎம் (AUM) அல்லது நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் ரூ.225.40 கோடி ஆகும்.

இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச முதலீடு ரூ.5 ஆயிரம் ஆகும். பொதுவாக, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இரண்டு திட்டங்களை வழங்குகின்றன.

நேரடித் திட்டத்தில், ஒரு முதலீட்டாளர் AMC உடன் நேரடியாக முதலீடு செய்ய வேண்டும், அதே சமயம் ஒரு வழக்கமான திட்டத்தில், முதலீட்டாளர் ஒரு விநியோகஸ்தர், தரகர் அல்லது வங்கியாளர் போன்ற ஒரு இடைத்தரகர் மூலம் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment