ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, அதன் சந்தாதவர்கள் பாதி பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிப்.1ஆம் தேதி முதல் இந்த விதியின் கீழ் பகுதியளவு பணத்தை எடுக்க பி.எஃப் சந்தாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், இந்த விதிகளின் கீழ், சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் முதலாளிகளின் பங்களிப்பு நீங்கலாக, 25 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும் என்று PFRDA கூறியுள்ளது.
NPS கணக்குகளில் இருந்து சந்தாதாரர்கள் தங்கள் பணத்தை எடுக்க நிபந்தனைகள்
- குழந்தைகளுக்கான மற்றும் சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான உயர்கல்வி செலவுகள் மற்றும் திருமணச் செலவுகள்
- சந்தாதாரரின் பெயரில் குடியிருப்பு வீடு அல்லது பிளாட், கூட்டு உடைமை போன்றவை வாங்க
- புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, முதன்மை நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் உள்ளிட்ட மற்றும் பிறநோய்களுக்கான மருத்துவ செலவுகளை உள்ளடக்கியது.
- திறன் மேம்பாட்டுக்கான செலவுகள்
NPS புதிய விதி: ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவது எப்படி?
- பிப்ரவரி 1 க்குப் பிறகு NPS கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெற விரும்பும் சந்தாதாரர், மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒரு காரணத்திற்கான சுய-அறிக்கையை அந்தந்த அரசாங்க நோடல் அலுவலகம் அல்லது மத்திய பதிவுசெய்தல் நிறுவனத்தின் (CRA) மூலம் சமர்ப்பிக்கலாம்.
- மேலும், திரும்பப் பெறுவதற்கான காரணம் ஏதேனும் தொடர்ந்த நோயாக இருந்தால், அவர்கள் சார்பாக ஒரு குடும்ப உறுப்பினர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பின்னர், விதிகளுக்கு உட்பட்டு பணம் திரும்ப அளிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“