scorecardresearch

ஃபிக்ஸட் டெபாசிட்க்கு எஸ்.பி.ஐ.யை விட நல்ல வட்டி.. இந்த அரசு வங்கியை பாருங்க

ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு 8.85 சதவீதம் வட்டி வழங்கும் அரசு வங்கி குறித்து பார்க்கலாம்.

Bank of Baroda Fixed Deposit Interest Rate Hike 2023
5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள NRE கால வைப்புத்தொகைகளுக்கு வங்கி தற்போது 6.5% வட்டியை வழங்குகிறது.

பல்வேறு அரசு வங்கிகள் தற்போது பணவீக்கத்தை குறைக்கும் உண்மையான வட்டி விகிதங்களை நிலையான வைப்புகளுக்கு (ஃபிக்ஸட் டெபாசிட்) வழங்குகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் & சிந்து வங்கி (PSB) அதிகபட்ச நிலையான வைப்பு வட்டி விகிதத்தை (8.85% வரை) வழங்குகிறது. இது, பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.

300 நாள்கள் நிலையான வைப்பு திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ், மிக மூத்த குடிமக்களுக்கு 8.35% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியும் வங்கி வழங்குகிறது. மற்ற வைப்பாளர்கள் 7.5% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

601 நாள்கள் நிலையான வைப்புத் திட்டம்

PSB-Fabulous Plus 601 நாட்கள் நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ், மிக மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வங்கி வழங்குகிறது. மற்ற வைப்பாளர்கள் 7% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

1051 நாள்கள் நிலையான வைப்பு

PSB SRSD-1051 நாள்கள் நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வங்கி வழங்குகிறது. மற்ற வைப்பாளர்கள் 7% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் டெர்ம் டெபாசிட்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்துக்கு 7.6% மற்றும் எஸ்பிஐ சர்வோத்தம் டெபாசிட் திட்டத்துக்கு 7.9% ஆகும்.

அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி மிக மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச விகிதமாக 8.05% 666 நாள்கள் வைப்புத்தொகைக்கு வழங்குகிறது. இதில், மூத்த குடிமக்கள் 7.75% வட்டி பெறலாம்.

தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா 399 நாட்கள் பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Know the psb fabulous 300 days fixed deposit scheme

Best of Express