irctc.co.in இணையதளம் மூலமாக எங்கு இருந்து வேண்டுமானாலும் ரயில் பயண டிக்கெட்களை முன் பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது இணையதள வங்கி சேவை, வாலெட், கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி வாடிக்கையாளர்கள் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா கார்டுகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.
எனவே ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது எஸ்.பி.ஐ வங்கி எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
நெட் பேங்கிங்:
SBI வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்தால் ரூ. 10 கட்டணம்.
வாலெட்:
SBI படி(buddy) மூலம் பணம் செலுத்தினால் ரூ. 10 கட்டணம்.
டெபிட் கார்டு:
முன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 15 கட்டணம்.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கபடுகிறது.
இந்த கட்டணங்கள் அனைத்தும் ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.