போஸ்ட் ஆபிஸ் மற்றும் எஸ்.பி.ஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்கள், டெபாசிட் காலங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒப்பீட்டு பார்க்கலாம்.
காலம்
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுக்குள் முடித்துக் கொள்ளலாம்.
போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் 1 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
வட்டி
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.2கோடிக்கும் உள்பட்ட முதலீடுக்கு 3-7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். மூத்தக் குடிமக்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.
அம்ரித் கலாஷ் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.6 சதவீதம் மூத்தக்குடி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபிஸில் ஆண்டுக்கு 6.8 முதல் 7.5 வரை வட்டி வழங்கப்படுகின்றன. இதில் மூத்தக் குடிமக்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். மேலும் சில சலுகைகளும் வழங்கப்படும்.
முன்கூட்டியே திரும்ப பெறுதல்
போஸ்ட் ஆபிஸில் 6 மாதங்களுக்கு முன்னதாக ஃபிக்ஸட் டெபாசிட்-ஐ திரும்ப பெற முடியாது. ஆனால் எஸ்.பி.ஐ வங்கியில் அபராதம் செலுத்தி முன்கூட்டியே பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“