New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sbi2.jpg)
நான்காம் காலாண்டில் எஸ்.பி.ஐ லாபம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க தங்களின் மொபைல் ஃபோன் எண்களை சேமிப்பு வங்கிக் கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.
எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க கணக்கு வைத்திருப்பவருக்கு இது உதவுகிறது. எனவே, உங்கள் மொபைல் எண்ணை எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் பதிவு செய்வது முக்கியம்.
எஸ்பிஐ இணைய வங்கி மூலம் மொபைல் எண்ணை புதுப்பித்தல்
Advertisment
- www.onlinesbi.com இல் உள்நுழைக
- "சுயவிவரம்-தனிப்பட்ட விவரங்கள்-மொபைல் எண்ணை மாற்று" என்பதற்குச் செல்லவும். இது,"எனது கணக்குகள் ( My Accounts)" என்பதன் கீழ், திரையின் இடது பேனலில் தோன்றும்.
- அடுத்த பக்கத்தில், கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
- பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணின் கடைசி 2 இலக்கங்கள் காட்டப்படும்.
- இதன் நிலை, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
வங்கி மூலமாக செல்போன் எண்ணை புதுப்பித்தல்
- அருகில் உள்ள எஸ்.பி.ஐ அலுவலகம் செல்லவும்.
- கோரிக்கை கடிதத்தை எழுதி சமர்பிக்கவும்
- தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, இணைப்பு கிளை மூலம் செய்யப்படும்.
- புதுப்பிப்பு நிலையைப் பற்றிய உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பி வைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.