மத்திய பட்ஜெட் 2023 தாக்கலின்போது மிகவும் பிரபலமான இரண்டு அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
மேலும், பெண் முதலீட்டாளர்களுக்காக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது குறித்து பார்க்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
2023 பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் SCSS இல் வழங்கப்படும் வட்டி விகிதம் 8% ஆகும். மேலும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வரி இலவசம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்
பட்ஜெட் 2023 இன் படி, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான (POMIS) ஒற்றைக் கணக்கு வைத்திருப்பவர் வரம்பு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டு இருப்புக்கான வரம்பு 9 லட்சம் முதல் ரூ. 15 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த சேமிப்புக்கு 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். கணக்கு தொடங்கி 3 ஆண்டுக்குள் மூடப்பட்டால் அசல் தொகையில் 1 சதவீதம் கழிக்கப்படும்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்
பெண் முதலீட்டாளர்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் இந்த யூனியன் பட்ஜெட் 2023 இல் அறிவிக்கப்பட்டது. இது ஒரு முறை, குறுகிய கால சேமிப்புத் திட்டமாகும், இது இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
ஆனால், துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை அல்லது எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
இந்த 3 போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்களிலும் முக்கிய மாற்றங்கள் 2023 ஏப்ரல் 1ஆம் தேதி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“