7.9 சதவீதம் வட்டி; வரி சேமிப்பு எஃப்.டி திட்டங்களை நோட் பண்ணுங்க
தனிநபர்கள் 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், வரிச் சேமிப்பு நிலையான வைப்புகளைச் செய்யும்போது, 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குகளைப் பெறலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட்கள் ஆபத்தில்லாத முதலீடுகளாக கருதப்படுகின்றன. இதனால் மூத்தக் குடிமக்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் இந்த முதலீடு மீது கவனம் செலுத்துகின்றனர். இதற்கிடையில், சமீபத்திய உயர் வட்டி விகிதங்கள் நிலையான வைப்புகளின் வழக்கமான முதலீட்டாளர்களை மேலும் கவர்ந்துள்ளது.
Advertisment
இந்தத் திட்டத்தில் தனிநபர்கள் 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், வரிச் சேமிப்பு நிலையான வைப்புகளைச் செய்யும்போது, 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குகளைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டிடிஎஸ் வட்டி விகிதங்கள் பொருந்தும். எனினும், இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை என்பதை மூத்தவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இது முதலீட்டாளரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி விதிக்கப்படுகிறது. மூத்தக் குடிமக்கள், வருமான வரிச் சட்டத்தின் 80TTB பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டிற்குள் மொத்த வட்டியில் இருந்து 50,000 ரூபாய் வரை கழித்துக் கொள்ளலாம்.
பொதுத்துறை வங்கிகள் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
எண்
வங்கி
5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்டி (%)
01
கனரா வங்கி
7
02
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
7.5
03
பஞ்சாப் நேஷனல் வங்கி
7
04
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
6.75
05
பேங்க் ஆஃப் பரோடா
7.15
தனியார் வங்கி வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்கள்
எண்
வங்கி
5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்டி (%)
01
ஐசிஐசிஐ வங்கி
7.5
02
யெஸ் வங்கி
7.75
03
ஆர்.பி.எல் வங்கி லிமிட்
7.5
04
டிசிபி வங்கி
7.9
05
ஹெச்டிஎஃப்சி வங்கி
7.5
06
கோடக் மஹிந்திரா வங்கி
6.7
07
ஆக்ஸிஸ் வங்கி
7.75
ஃபிக்ஸட் டெபாசிட்டில் கூட்டுக் கணக்கில் முதல் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், மற்ற கணக்கு வைத்திருப்பவருக்கு அது முதிர்ச்சியடையும் முன் வைப்புத் தொகையை திரும்பப் பெற உரிமை உண்டு. அதேநேரத்தில், வங்கியானது அபராதம் இல்லாமல் வைப்புத் தொகைக்கான வட்டியை உரிய விகிதத்தில் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“