பிக்சட் டெபாசிட்டை ( FD) முன்னதாக முடிக்க திட்டமா? – அதற்கு இவ்வளவு அபராதமா?- வங்கி கிளையை உடனே நாடுங்க…
Fixed Deposit Premature Withdrawal: SBI, ICICI, HDFC Bank : பிக்சட் டெபாசிட்டை ( Fixed Deposit) முன்னதாக முடிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் தனித்தனியே விதிமுறைகளை வகுத்துள்ளன.
By: WebDesk
Updated: November 29, 2019, 12:33:46 PM
sbi fixed deposit rate 2019, hdfc fixed deposit, fd, icici bank fd, company fd, fd interest, rate cut, reserve bank of india, பிக்சட் டெபாசிட், முதிர்ச்சிக்காலம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, வட்டி விகிதம் அபராதம், கட்டணம்
Premature Withdrawal of FDs: பிக்சட் டெபாசிட்டை ( Fixed Deposit) முன்னதாக முடிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் தனித்தனியே விதிமுறைகளை வகுத்துள்ளன.
இந்தியர்கள் பெரும்பாலும் தங்களது சேமிப்பை, பிக்சட் டெபாசிட்களாகவே வங்கிகளில் சேமித்து வைக்க விரும்புகின்றனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அவர்கள் மாத சிறுசேமிப்பு கணக்கில் சேர அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தியர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நாட்டில் செயல்பட்டுவரும் பொதுத்துறை மட்டுமல்லாது தனியார் துறை வங்கிகளும் பிக்சட் டெபாசிட் சேவைகளை வழங்கி வருகின்றன. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் காலஅளவிலான பிக்சட் டெபாசிட் சேவைகளை, வங்கிகள் அளித்து வருகின்றன.
பிக்சட் டெபாசிட் கணக்கை துவக்கும்போதே இரண்டு விதமான ஆப்சன்கள் உள்ளன. அதாவது முன்கூட்டியே முடித்துக்கொள்ளும் பிக்சட் டெபாசிட்கள், முன்கூட்டி முடித்துக்கொள்ள இயலாத பிக்சட் டெபாசிட்கள். இவற்றில் இரண்டாவது ஆப்சனில், பிக்சட் டெபாசிட் காலக்கெடு முடிந்தபின்னரே, அந்த பணம் நமது கைக்கு கிடைக்கும்.
பிக்சட் டெபாசிட்டை முன்னரே முடிக்க திட்டமிட்டால், ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொருவிதமான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை வகுத்துள்ளது
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI)
முன்னதாக முடிக்கப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு 0.05 சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான மதிப்பு எனில், அதாவது ரூ.3 லட்சத்தை பிக்சட் டெபாசிட் செய்து முன்னதாக முடிக்கும் பட்சத்தில் ரூ.1,500 அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிக்சட் டெபாசிட்டின் மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்பு எனில், 1 சதவீத அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.18 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். பிக்சட் டெபாசிட்டில் பணம் இருந்த காலகட்டத்திற்கு ஏற்ப வங்கி வட்டியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாட்கள் கால அளவிலான பிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வட்டி வழங்குவதில்லை.
ஐசிஐசிஐ வங்கி
பிக்சட் டெபாசிட் பணத்தை முதிர்ச்சிக்காலம் முடிவடையாமல் பணம் வேண்டுமென்றால் அந்த கோரிக்கையை, வங்கி ஒருநாள் கால அளவில் பரிசீலிக்கும். அதுவே பிக்சட் டெபாசிட்டை முடித்துக்கொள்வதாக இருந்தால், கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்படும்.
ரூ.5 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட், முதிர்ச்சிக்காலம் 1 ஆண்டுக்கும் குறைவாக இருந்தால் 0.50 சதவீதமும், முதிர்ச்சிக்காலம் 1 ஆண்டுக்கு மேலாக இருந்தால் 1 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.
பிக்சட் டெபாசிட்டை, முடித்துக்கொள்வதாக இருந்தால், சேமிப்பு கணக்கு துவங்கவைத்து அதில் அந்த பணம் சேர்க்கப்படும்.
பிக்சட் டெபாசிட் முதிர்ச்சிக்காலத்துக்கு முன்னரே பணத்தை திரும்ப பெற நினைத்தால், வங்கி கிளையை நேரடியாக தான் நாட வேண்டும். ஆன்லைனில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது.
ஹெச்டிஎப்சி வங்கி
ரூ.1 கோடிக்கும் குறைவான மதிப்பு கொண்ட பிக்சட் டெபாசிட்கள் எனில், 1 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.
7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு, இந்த வங்கி எவ்வித அபராத கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.