மதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் பாரத் ஸ்டேட் வங்கிக்குச் சரிவு!

கோடக் மஹேந்திரா வங்கி 2வது இடம் பிடித்துள்ளது

சந்திரன் ஆர்

நாட்டின் மதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் பாரத் ஸ்டேட் வங்கிக்குச் சரிந்துள்ளது. அதேசமயம், கோடக் மஹேந்திரா வங்கி 2வது இடம் பிடித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் பெற்றக் கடன்களை திட்டமிட்டே பலர் திருப்பித் தராமல் இருப்பதால், அவற்றின் வாராக்கடன் அளவு அதிகரித்து வரும் நிலையில், பாரத் ஸ்டேட் வங்கியின் நிகர மொத்த மதிப்பும் குறைந்துள்ளது. நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க வங்கி என்ற அந்தஸ்த்தில் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அடுத்த நிலையில் 2.22 லட்சம் கோடி மதிப்பு கொண்டுள்ள பாரத் ஸ்டேட்யை விட – மற்றொரு தனியார் துறை வங்கியான கோடக் மஹேந்திரா வங்கி தேர்வாகியுள்ளது. தற்போது இந்திய பங்குசந்தையில் விற்பனையாகும் இந்த வங்கியின் பங்குகளின் மதிப்பைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது கோடக் வங்கி 2.23 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்பை எட்டியுள்ளன. முதல் நிலையில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய மதிப்பு மிக அதிக அளவாக 5.03 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது.

கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வெளியாகும் வரும் வங்கி நிதி மோசடிகளில் சிக்கியிருப்பவை பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள் என்பதால், அவற்றின் சந்தை மதிப்பில் ஆட்டம் தெரிகிறது. மாறாக கடந்த ஒரு மாதத்தில் கோடக் வங்கி, இந்தஸ் வங்கி போன்றவை சராசரியாக 30 சதவீத அளவு வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் 15 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close