kotak mahindra atm kotak mahindra bank : முன்பெல்லாம் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்வது எவ்வளவு கடினம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதிலும் சரியான முகவரி ஆவணம், பெயர் ஆவணம் இல்லையென்றால் அக்கவுண்டை கடைசி வரை ஓபன் செய்யவே முடியாது.
ஆனால், இன்று அப்படி இல்லை. அதிலும் கொடாக் வங்கி பற்றி கேட்கவே வேண்டாம். அக்கவுண்ட் ஓபன் செய்வது மிக மிக சுலபம். அதுவும் உங்க வீட்டுக்கே வந்து அக்கவுண்ட் ஓபன் செய்து விட்டு, கிட்டையும் கொடுத்து விட்டு செல்வார்கள் வங்கி ஊழியர்கள் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்.
kotak mahindra atm kotak mahindra bank: அப்படி என்ன வசதி?
கொடாக் மகிந்த்ரா வங்கி, வீடியோ அடிப்படையிலான கேஒய்சி மூலம் புதிய கொடாக் 811 சேமிப்பு கணக்கை வங்கிக்கே வராமல் வீட்டிலிருந்தே திறந்துகொள்ளலாம். புதிய வங்கிக் கணக்குகளை திறக்க இந்தியாவிலேயே முதல்முறையாக வீடியோ கேஒய்சியை நடைமுறைப்படுத்தியுள்ள வங்கி கொடாக் மகிந்த்ராதான்.
இந்தியன் பேங்க் ஏடிஎம் கார்டு இருக்கா? உங்களுக்கு தான் இந்த தகவல்!
கொடாக் 811 சேமிப்புக் கணக்கை வீட்டிலிருந்தே திறக்க http://www.kotak.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் பெயர், மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்ட பயனாளர் விவரங்களை வழங்க வேண்டும். அதன்பின், ஆதார் எண்ணை பயன்படுத்தி சேமிப்புக் கணக்கு திறக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், பான் எண், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
உங்கள் மொபைல் போனில் லொகேஷனை தெரிந்துகொள்ள அனுமதியளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து வீடியோ கேஒய்சி தொடங்கும். வங்கி அதிகாரியுடன் வீடியோ கேஒய்சியை முடித்தபிறகு சிறிது நேரத்தில் உங்களது கொடாக் 811 சேமிப்புக் கணக்கு தயாராகிவிடும். உங்களுக்காக அக்கவுண்ட் எண்ணும், Customer Relationship Number (CRN) எண்ணும் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil