/tamil-ie/media/media_files/uploads/2023/05/ls-2000-money-9.jpg)
கோடக் மஹிந்திரா வங்கி 23 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு மூத்த குடிமக்கள் 7.80% வரை சம்பாதிக்கலாம்.
fixed-deposits | கோடக் மஹிந்திரா வங்கி, மூத்த குடிமக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகையின் (FDகள்) வட்டி விகிதங்களை 7.80% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் தற்போது மேம்பட்ட வருவாயைப் பெறலாம், பல்வேறு காலகட்டங்களில் 85 bps வரை விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், 23 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கு, மூத்த குடிமக்கள் 7.80% வரை சம்பாதிக்கலாம். ரூ.2 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யும் வழக்கமான வாடிக்கையாளர்களும் 3 முதல் 4 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 50 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) அதிகரிப்பால் பயனடைகிறார்கள்.
கோடக் மஹிந்திரா வங்கியின் அதிகரித்த நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் இங்கே:
காலம் | வட்டி (சாதாரண மக்கள்) | மூத்தக் குடிமக்கள் | புதிய வட்டி (சாதாரண மக்கள்) | மூத்தக் குடிமக்கள் |
23 மாதங்கள் | 7.25% | 7.75% | 7.25% | 7.80% |
23 மாதங்கள் 1 நாள் - 2 வருடங்களுக்கும் குறைவானது | 7.25% | 7.75% | 7.25% | 7.80% |
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் - 3 ஆண்டுகளுக்கு குறைவாக | 7.10% | 7.60% | 7.10% | 7.65% |
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் - 4 ஆண்டுகளுக்கு குறைவாக | 6.50% | 7.00% | 7.00% | 7.60% |
4 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் - 5 ஆண்டுகளுக்கு குறைவாக | 6.25% | 6.75% | 7.00% | 7.60% |
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (MPC), வெள்ளிக்கிழமை, டிசம்பர் 8, 2023 அன்று, ஐந்தாவது முறையாக 6.5% ஆக இருந்த ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்த பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.