/tamil-ie/media/media_files/uploads/2017/07/Money.jpg)
ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள டெபாசிட்டுகளுக்கு வங்கி 2.75% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.
Kotak Mahindra Bank Revised Fixed Deposits: தனியார் வங்கியான கோடாக் மஹிந்திரா ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. புதிய வட்டி விகிதங்கள் அக்.25, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்தப் புதிய வட்டி விகிதத்தின்படி ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள டெபாசிட்டுகளுக்கு வங்கி 2.75% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.
மேலும், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை வங்கி 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வட்டி விகிதம் 7.10% ஆக காணப்படுகிறது. தொடர்ந்து, 23 மாதங்கள் 1 நாள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான டெபாசிட்களுக்கான விகிதங்களை 5 பிபிஎஸ் உயர்த்தியுள்ளனர். இதனால், தற்போது 7.25% வீதம் கிடைக்கிறது.
கோடக் வங்கி திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் (FD) விகிதங்கள்
எண் | பொதுமக்கள் | மூத்தக் குடிமக்கள் | |
முதிர்ச்சி நாள்கள் - முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி உண்டு | ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட் | ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட் | |
01 | 7-14 நாள்கள் | 2.75% | 3.25% |
02 | 15-30 நாள்கள் | 3.00% | 3.50% |
03 | 31-45 நாள்கள் | 3.25% | 3.75% |
04 | 46-90 நாள்கள் | 3.50% | 4.00% |
05 | 91-120 நாள்கள் | 4.00% | 4.50% |
06 | 121-179 நாள்கள் | 4.25% | 4.75% |
07 | 180 நாள்கள் | 7.00% | 7.50% |
08 | 181 நாள்கள் முதல் 269 நாள்கள் | 6.00% | 6.50% |
09 | 270 நாள்கள் | 6.00% | 6.50% |
10 | 271 நாள்கள் முதல் 363 நாள்கள் | 6.00% | 6.50% |
11 | 364 நாள்கள் | 6.50% | 7.00% |
12 | 365 நாள்கள் முதல் 389 நாள்கள் | 7.10% | 7.60% |
13 | 390 நாள்கள் (12 மாதம் 25 நாள்கள்) | 7.15% | 7.65% |
14 | 391 நாள்கள் (23 மாதத்துக்குள்) | 7.20% | 7.70% |
15 | 23 மாதங்கள் | 7.25% | 7.75% |
16 | 23 மாதம் ஒருநாள்- 2 ஆண்டுக்குள் | 7.25% | 7.75% |
17 | 2 ஆண்டு-3 ஆண்டுக்கும் குறைவாக | 7.10% | 7.60% |
18 | 3 ஆண்டு முதல் 4 ஆண்டுக்குள் | 6.50% | 7.00% |
19 | 4 ஆண்டுக்கு மேல்5 ஆண்டுக்கும் குறைவாக | 6.25% | 6.75% |
20 | 5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்குள் | 6.20% | 6.70% |
இந்த குறிப்பிட்ட முதிர்வு காலங்களுக்கு, வங்கி பின்வரும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.