கோவை கொடிசியா தொழிற்க்காட்சி வளாகத்தில் இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் இ.இ.பி.சி சார்பில் இரண்டு நாள் கண்காட்சி கருத்தரங்கு நேற்று துவக்கம்.
துவக்க விழாவில் பி.ஏ.பி .சி சேர்மன் அருண் குமார் கரோடியா தலைமை வகித்தார்.நிகழ்வைத் தொடர்ந்து தமிழக சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயலர் அர்ச்சனா பட்நாயக் கொடிசியா தொழிற்க்காட்சி அரங்கில் பேசியதாவது பேசியதாவது.
இந்தியாவிற்கு தேவையான வாகன உதிரி பாகங்கள் 35" சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகின்றன அந்த உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம் என்றும் குறிப்பாக ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய 20 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி தேவைப்படுகிறது என இவ்வாறு பேசினார்.
இந்த கண்காட்சி விழா நிகழ்வில் சிறந்த ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு இ.இ.பி.சி ஏற்றுமதி விருதுகள் வழங்கப்பட்டது.கண்காட்சியில் சர்வதேச அளவிலான பல நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன பாதுகாப்பு தடவால உற்பத்தி நிறுவனங்கள் டிட்கோ - டாடா ஸ்டீல்- சீமென்ஸ் - ஜாகுவார் லேலண்ட் - எதர் - சி.எம்.டி.ஐ.சி.ஆர்.ஐ. - லேண்ட்ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான்.