scorecardresearch

கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி விலை.. அநியாயத்திற்கு குறைந்தது மக்களே!

காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கு மேல் எகிறயிது. தற்போது அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

koyambedu tamil koyambedu market
koyambedu tamil koyambedu market

koyambedu market koyambedu market vegetable price : தமிழகம் முழுவதும் நல்லமழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு காய்கறிகளின் விலை குறையத் தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி மொத்த வியாபாரிகள் கூறும்போது, “தமிழகம் மற்றும் அதை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. அதனால் அப்பகுதிகளில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் நடவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. என்றனர்.

சென்னைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.சென்னையில் கடந்த சில மாதமாக காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. கிலோ 50 ரூபாய்கு குறைந்து எந்த காய்கறிகளும் வாங்க முடியாத நிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கு மேல் எகிறயிது. தற்போது அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Koyambedu market koyambedu market vegetable price tamil news today