ஹாப்பி நியூஸ்.. காய்கறி விலை ரொம்ப கம்மி!

காய்கறி விலை சரிந்திருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

tomato tamil tomato vegetable tamil
tomato tamil tomato vegetable tamil

koyambedu tamil vegetable tamil : சென்னையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்விலேயே இருந்தது. நேற்றைய தினத்திலும் காய்கறி விலை சரிந்திருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 5) ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 15 ரூபாயாக இருந்தது. வெங்காயம் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து ஐந்து நாட்களாக வெங்காயம் விலை மாற்றம் இல்லாமல் 30 ரூபாயிலேயே இருக்கிறது. முருங்கைக்காய் விலை 20 ரூபாயாகவும், . அவரைக்காய் விலை 30 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 20 ரூபாயாகவும் இருக்கிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி – ரூ.10
வெங்காயம் – ரூ.30
அவரைக்காய் – ரூ.30
பீன்ஸ் – ரூ.20
பீட்ரூட் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.15
மாங்காய் – ரூ.40
நூக்கல் – ரூ.10
உருளைக் கிழங்கு – ரூ.30
முள்ளங்கி – ரூ.10
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.20

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Koyambedu tamil vegetable tamil koyambedu vegetable price

Next Story
சுகாதாரக் காப்பீட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்health insurance plans, best family health insurance, medical insurance claims, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், சுகாதாரக் காப்பீடு முக்கிய விஷயங்கள், health insurance plans, மருத்துவக் காப்பீட்டு திட்டம், குடும்ப சுகாதாரக் காப்பீட்டு திட்டம், family health insurance plans, health insurance details, health insurance important details
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com