பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் விதமாக, EPFO-வில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு தொழிலாளர் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மேலும், பயனாளிகள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழிகளை மதிப்பீடு செய்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய விதிகளின்படி, பயனாளிகளின் முழு பங்களிப்பும், அதாவது அவர்களின் "அடிப்படை ஊதியத்தில்" 12 சதவீதம், EPFO-க்கு செல்கிறது. மறுபுறம், பொருந்தக்கூடிய முதலாளியின் பங்களிப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது - 3.67 சதவீதம் EPF க்கும், 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) செல்கிறது. இது தவிர, இந்திய அரசு ஒரு ஊழியரின் ஓய்வூதியத்திற்காக 1.16 சதவீதம் பங்களிப்பையும் வழங்குகிறது.
EPFO ஆல் நிர்வகிக்கப்படும் EPS, 58 வயதிற்குப் பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "உறுப்பினர்கள் 12 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்க அனுமதித்தால், அவர்கள் அதிக பங்களிப்பை வழங்கலாம், இறுதியில் ஓய்வுக்கு பிறகு அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம்" எனக் கூறப்பட்டு வருகிறது. இதற்கான பரிசீலனையில் அமைச்சகம் இருப்பதாக தெரிகிறது.
கடந்த 2021-22ல் ரூ.18.3 லட்சம் கோடியாக இருந்த EPFO முதலீட்டுத் தொகை 2022-23ல் ரூ.21.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
“ஊழியர்களுக்கான கட்டாய பங்களிப்பு சதவிகிதம் நீக்கப்பட்டால், அது கையில் அதிக பணத்திற்கு வழிவகுக்கும். மேலும், இது ஊழியர்களின் தேவைக்கேற்ப செலவளிக்கக்கூடிய வருமானத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடும். EPF இன் இன்வெஸ்டிபிள் கார்பஸ் குறையலாம்" என்று சரஃப் மற்றும் பார்ட்னர்கள் அடில் லதா கூறியுள்ளார்.
இதுதவிர, இபிஎஸ் வரம்பிற்குள் கிக் (gig) மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களை சேர்க்கும் விதியை கொண்டு வர தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. "அத்தகைய தொழிலாளர்களின் முதலாளிகள், தொழிலாளியின் மாத வருவாயில் 1-2 சதவீதம் EPS க்கு பங்களிக்குமாறு அறிவுறுத்தப்படலாம்" என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்ளகக் குழுவின் அறிக்கைக்காக தொழிலாளர் அமைச்சகம் காத்திருக்கிறது. இந்த அறிக்கை டிசம்பரில் சமர்ப்பிக்கப்படும். "பிளாட்பார்ம்/கிக் (gig) தொழிலாளி 2-3 நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டிருந்தால், அவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குமாறு அறிவுறுத்தப்படும்" எனக் கூறப்படுகிறது.
தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் நாட்டில் உள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை அடுத்த 4 - 5 ஆண்டுகளில் 50 மில்லியனாக உயரும். அத்தகைய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் Zomato, Swiggy, Dunzo மற்றும் Urban Company ஆகியவை அடங்கும்.
அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.15,000 வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு EPF கணக்குகள் கட்டாயம். இதை ரூ.25,000 ஆக உயர்த்த பரிந்துரை உள்ளது.
ஐடி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் EPF கணக்கில் ஒரு பணியாளரின் பங்களிப்பு ரூ. 1.5 லட்சம் வரை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. பங்களிப்பு, குவிப்பு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகிய கட்டங்களில் EPF திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படாது. இருப்பினும், 2020-21 முதல், ஒரு நிதியாண்டில் ரூ. 7.5 லட்சத்துக்கும் அதிகமான EPF கணக்கில் பணியாளர் செலுத்தும் எந்தவொரு பங்களிப்புக்கும் வரி விதிக்கப்படும். அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள், அதிக வரி இல்லாத வருமானத்திற்காக EPF இல் அதிகப்படியான தொகையை முதலீடு செய்யும் போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் இது உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“