/tamil-ie/media/media_files/uploads/2018/03/Lakshmi-and-Mahesh-1.jpg)
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனின் ஓரே மகளான டாக்டர் லட்சுமி வேணுக்கும், பெங்களூரைச் சேர்ந்த மகேஷ் கோகினேனிக்கும் இன்று(8.3.18) திருமணம் நடைபெற்றது.
டிவிஎஸ் குழும நிறுவனமான சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவரான லட்சுமிக்கும், பெங்களூர் ஜோதபூரைச் சேர்ந்த மகேஷ் கோகினேனிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஜோத்பூரில் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
டாக்டர் வேணு லட்சுமி, யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு நிர்வாகம் தொடர்பாக பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தவர். டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் (ஆட்டோ உதிரி பாக தயாரிப்புப் பிரிவு) மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களின் உத்திகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வருகிறார் லட்சுமி.
ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ், பத்மபூஷண விருதுப்பெற்ற, இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என்.ஜி ரங்காவின் மூத்த பேரன் ஆவர். மகேஷின் தந்தை, கமலேந்தர கோகினேனி மற்றும் தாயார் சுகுனா. லண்டன் பல்கலைக் கழகத்தில் படித்த மகேஷ், சிஸ்டமெடிக் ஆராய்ச்சியை வெற்றிக்கரமாக முடித்து விட்டு இந்தியாவிற்கு வந்தார். தற்போது தனியாக கிஃப்ஸ்சே என்ற மைக்ரோ எண்டர்டைமெண்டை நடத்தி வருகிறார்.
இவர்களின் திருமணம் தென்னிந்தியா கலாச்சாரத்தின் படி மிகவும் கோலகலமாக நடைப்பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.