Bank Locker Agreement Renewal Last Date 2023: வங்கி லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பிப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் பல்வேறு வங்கிகள் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வாடிக்கையாளர்களுக்கு இன்னும் தெரிவிக்கவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது.
தொடர்ந்து, இந்திய வங்கிச் சங்கம் (ஐபிஏ) உருவாக்கிய மாதிரி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான புதிய காலக்கெடு
- வாடிக்கையாளர்கள் வங்கி லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான புதிய கடைசி தேதியாக 2023 டிசம்பர் 31 ஆம் தேதியை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
- 30 ஏப்ரல் 2023க்குள் வங்கிகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திருத்தப்பட்ட தேவைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும், ஜூன் 30 மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் 50% மற்றும் 75% வாடிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களைப் புதுப்பித்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- ரிசர்வ் வங்கி, ஐபிஏ மாதிரி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, திருத்தியமைத்து, பிப்ரவரி 28க்குள் அனைத்து வங்கிகளுக்கும் திருத்தப்பட்ட பதிப்பை விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஜனவரி 1, 2023க்குள் வங்கிகள் ஏற்கனவே இருக்கும் லாக்கர் வாடிக்கையாளர்களுடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/