ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி 4 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.
ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30, 2023க்குள் மாற்ற வேண்டும்.
தற்போது, அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ வாடிக்கையாளர்கள் வங்கிகளை அணுகி வருகின்றனர். இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள வங்கி விடுமுறை நாட்களை சரிபார்க்கலாம்.
ஆகஸ்ட் வங்கி விடுமுறை நாள்கள்
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் பொதுவிடுமுறை ஆகும்.
தொடர்ந்து, டெண்டாங் லோ ரம் ஃபத், பார்சி புத்தாண்டு (ஷாஹென்ஷாஹி), ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, முதல் ஓணம், திருவோணம், ரக்ஷா பந்தன் மற்றும் ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல் ஆகிய நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 2023 இல் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உள்பட மொத்தம் 14 வங்கி விடுமுறை ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“