Advertisment

பிபிஎஃப் vs செல்வ மகள் vs மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: எதில் பெஸ்ட் வட்டி?

போஸ்ட் ஆபிஸில் 6.5% முதல் 8.2% வரையிலான வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.

author-image
WebDesk
Aug 23, 2023 16:40 IST
New Update
The Latest Fixed Deposit Interest Rates

வட்டி விகிதங்கள் ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டுக்கானவை ஆகும்.

போஸ்ட் ஆபிஸில் முதலீட்டாளர்களுக்கு 8 முதலீட்டு தேர்வுகள் கிடைக்கின்றன.

இந்த 8 சிறுசேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய சேமிப்பு சான்றிதழ், 5 ஆண்டு கால அஞ்சலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும்.

Advertisment

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், வட்டி விகிதங்கள் ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டுக்கானவை ஆகும்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பிபிஎஃப் (PPF) என்பது நீண்ட கால வரி சேமிப்பு திட்டமாகும். இது 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.

கணக்கை செயலில் வைத்திருக்க வருடத்திற்கு குறைந்தபட்சம் ₹500 வைப்புத் தொகை தேவை. இந்தத் திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)

60 வயது நிரம்பிய முதலீட்டாளர்கள் வழக்கமான வட்டி வருமானத்தைப் பெற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் தங்கள் வாழ்நாளில் ₹30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மூத்த குடிமக்கள் திட்டத்தில் 8.2% வட்டி கிடைக்கிறது.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Post Office Scheme #Sukanya Samriddhi Yojana #Ppf #Tax Saving Investment #Public Provident Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment