employees pension : தனியார் வங்கிகளில் 15,000க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக EPFO pension : தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஊழியர்களின் சம்பள கணக்கில் பிஎஃப் பிடித்தம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நமது சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதம் பங்களிப்பும் உங்களின் பிஎஃப் கணக்கில் பிரித்து போடப்படும்..
ஊழியர் விரும்பும் காலத்தில் அல்லது அவசர காலத்தில் இந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம். பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஈ.பி.எஸ் (Employee Pension Scheme) எனப்படும் பென்ஷனும் உள்ளது. இது ஊழியரின் சம்பள கணக்கு மற்றும் நிறுவனத்தின் சார்பில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பென்ஷன் சேவையில் கொண்டு வரப்பட்ட புதிய மாற்றத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance)
என இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் வாங்கும் ஊழியர்க்ளின் கணக்கில் ஈபிஎஸ் பங்களிப்பு பிடிக்க தேவையில்லை என்று கூறப்பட்டது.
இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது. இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.