Advertisment

எஃப்.டி-க்கு 9%-க்கு மேல் வட்டி: இந்த 10 வங்கிகளை மறக்காதீங்க!

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தற்போது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 4.50%-9% வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.5%-9.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
The Latest Fixed Deposit Interest Rates

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு உயர் வட்டி வழங்கும் 10 ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளில் அபாயம் குறைவு என்பதால், அனைத்து தரப்பினரும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு அதிக வட்டி வழங்கும் 10 ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தற்போது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 4.50%-9% வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.5%-9.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது.

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆண்டுதோறும் 3%-8.5% FD வட்டி விகிதங்களை பொது வாடிக்கையாளர்களுக்கும், 3.75%-9.25% மூத்த குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 3650 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகிறது.

சூர்யோதாய் சிறு நிதி வங்கி

தற்போது, சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் எஃப்.டி வட்டி விகிதங்கள் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 4%-8.65% கிடைக்கும்.

அதேநேரத்தில், மூத்தக் குடிமக்களுக்கு 4.5%-9.1% வரையில் வட்டி விகிதங்கள் உள்ளன.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 4%-8.50% வட்டி விகிதங்களை பொது வாடிக்கையாளர்களுக்கும், 4.75%-9.1% மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது. வரி-சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களுக்கு 

ஆண்டுதோறும் 7.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.1% வரை வட்டி விகிதங்கள் இருக்கும்.

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியில் பொது மக்களுக்கு ஆண்டுதோறும் 3.5%-8.55% மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் 4%-9.05% எஃப்.டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. வரி-சேமிப்பு FD களில், பொது மக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி விகிதத்தை 5 வருட காலத்திற்கு வழங்குகிறது.

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் 3.5%-8.5% வட்டி விகிதங்களைப் பெறலாம்.

மூத்த குடிமக்களுக்கு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு விகிதங்கள் ஆண்டுக்கு 9% வரை அதிகரிக்கும்.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிலையான வைப்பு விகிதங்கள் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 3%-8.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு கிடைக்கும்.

வங்கி தற்போது பொது மக்களுக்கு வரி சேமிப்பு FD களில் ஆண்டுதோறும் 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதங்களை 5 வருட காலத்திற்கு வழங்குகிறது.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD வட்டி விகிதங்கள் பொது மக்களுக்கு 3.75%-8.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 4.25%-9% ஆக காணப்படுகிறது.

வரி-சேமிப்பு FDகளுக்கான வட்டி விகிதம் 5 வருட காலத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 7.2% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.7% ஆகும்.

எஸ்பிஎம் வங்கி இந்தியா FD வட்டி விகிதங்கள்

எஸ்பிஎம் பேங்க் இந்தியா பொது மக்களுக்கு ஆண்டுதோறும் 4.25%-8.25% வட்டி விகிதங்களையும் மூத்த குடிமக்களுக்கு 4.75%-8.75% வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. வரி சேமிப்பு FD வட்டி விகிதம் பொது மக்களுக்கு ஆண்டுக்கு 7.75% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.25% ஆகும்.

இஎஸ்எஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ்

இஎஸ்எஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 4%-8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4.5%-8.75% வட்டி விகிதங்களை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகிறது.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி காப்பீடு

பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட்கள் வைப்பாளர் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தால் (DICGC) காப்பீடு செய்யப்படுகின்றன. டிஐசிஜிசி என்பது ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமாகும், இது ஒவ்வொரு டெபாசிட்டரும் ரூ. 5 லட்சம் வரையிலான மொத்த வைப்புத்தொகையை காப்பீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment