Fixed Deposits | Icici Bank | Sbi Bank | ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்த உயர்வுக்கு பிறகு சாதாரண முதலீட்டாளர்களின் ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3% முதல் 7.2% வரையிலான வட்டி விகிதங்களும், மூத்தக் குடிமக்களுக்கு 3.5% முதல் 7.75% வரையிலும் வங்கி வட்டி வழங்குகிறது.
தொடர்ந்து, 15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு ஐசிஐசிஐ வங்கி பொது மக்களுக்கு அதிகபட்சமாக 7.20% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வருமானத்தை வழங்குகிறது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. முன்னதாக வங்கி 16 அக்டோபர் 2023 அன்று டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை திருத்தியது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
- 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை 3.00%
- 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை 3.00%
- 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை 3.50%
- 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை 4.25%
- 61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை 4.50%
- 91 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை 4.75%
- 121 நாள்கள் முதல் 150 நாள்கள் வரை 4.75%
- 151 நாள்கள் முதல் 184 நாள்கள் வரை 4.75%
- 185 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை 5.75%
- 211 நாள்கள் முதல் 270 நாள்கள் வரை 5.75%
- 271 நாள்கள் முதல் 289 நாள்கள் வரை 6.00%
- 290 நாள்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது 6.00%
- 1 வருடம் முதல் 389 நாள்கள் வரை 6.70%
- 390 நாள்கள் முதல் < 15 மாதங்கள் வரை 6.70%
- 15 மாதங்கள் முதல் < 18 மாதங்கள் வரை 7.20%
- 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 7.20%
- 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.00%
- 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 7.00%
- 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.90%
- 5 ஆண்டுகள் (80C FD) - அதிகபட்சம் `1.50 லட்சம் 7.00%
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்
எஸ்.பி.ஐ (SBI) ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 3.50%-7.10% வரை ஆண்டுக்கு வழங்கப்படுகிகிறது. மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி கிடைக்கும்.
இந்த வட்டி விகிதங்கள் கடந்தாண்டு (2023) டிசம்பர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“