Advertisment

8% வரை வட்டி; 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்; தனியார் வங்கிகளின் வட்டி இதோ!

மூத்த குடிமக்கள் DCB வங்கியில் 26 மாதங்கள் மற்றும் 37 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 8.1% வட்டி விகிதத்தை டிசிபி (DCB) வங்கி வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் அனைத்து வயது குடிமக்களும் முதலீடு செய்ய விரும்புகின்றனர். காரணம், இதில் இடர்பாடுகள் குறைவாக இருப்பதே ஆகும். 

Advertisment

ஐசிஐசிஐ வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூத்தக் குடிமக்களுக்கு 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஆர்.பி.எல் (RBL) வங்கி

ரத்னாகர் பேங்க் லிமிடெட் (ஆர்.பி.எல்.) 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 8% வட்டி

விகிதத்தை வழங்குகிறது.

ஐடிஎஃப்சி (IDFC) வங்கி

ஐடிஎஃப்சி (IDFC) வங்கி 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

டிசிபி (DCB) வங்கி

மூத்த குடிமக்கள் DCB வங்கியில் 26 மாதங்கள் மற்றும் 37 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 8.1% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

டிடிஎஸ் பிடித்தம்

மூத்த குடிமகன் அவர்களின் பான்கார்டு எண்ணை (PAN) வழங்கத் தவறினால், TDS விகிதம் 20% கழிக்கப்படும். இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்குக் குறைவான  ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குப் பொருந்தும்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தில், மூத்தக் குடிமக்களின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறவில்லை என்றால், டி.டி.எஸ். விலக்கைத் பெற அவர்கள் படிவம் 15H ஐ வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment