முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தையும், சில சந்தர்ப்பங்களில் நிலையான மாத வருமானத்தையும் அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் வழங்குகின்றன.
அஞ்சலக ஃபிக்ஸட் டெபாசிட்
இது அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் ஒரு நிலையான வைப்புத் திட்டமாகும். இதில், ஒருவர் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச முதலீட்டில் ரூ.1000 மற்றும் ரூ.100 மடங்குகளில் கணக்கை தொடங்கலாம். இதில், 5 ஆண்டு திட்டத்தில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆகவே, இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால் அதற்கு 6.9 சதவீத வட்டியைப் பெற்றால், திட்டம் முடிந்தவுடன் ரூ.70,806 வட்டியாக கிடைக்கும்.
மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு உங்கள் வருமானம் ரூ.1070806 ஆக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு 10 லட்சத்தை முதலீடு செய்து அதற்கு 7.0 சதவீத வட்டி கிடைத்தால், வட்டியாக மட்டும் ரூ.1,48,882 கிடைக்கும். சேமிப்பு, வருமானமாக ரூ.11,48,882 கிடைக்கும்.
வட்டி வருமானம்
உங்கள் முதலீட்டுத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சமாக இருந்தால் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும். அந்த வகையில், வட்டியாக ரூ.235075 மற்றும் மொத்த வருமானமாக ரூ.12,35,075 கிடைக்கும்.
7.5 சதவீத வட்டியுடன் ஐந்தாண்டுகளுக்கு ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், வட்டியாக ரூ.4,49,948 மற்றும் மொத்த வருமானமாக ரூ.1449948 கிடைக்கும்.
இந்த வருமானம் உங்களுக்கு வரிச் சலுகைகளையும் வழங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“