Advertisment

இரண்டு ஆண்டுகள் முதலீடு;7.25% வட்டி: இந்த டெபாசிட் திட்டங்களை பாருங்க

இரண்டு ஆண்டுகள் கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.25% வரை வங்கிகள் தற்போது வட்டி வழங்குகின்றன. அந்த வங்கிகள், வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

இரண்டு வருட காலவரையறை கொண்ட எஃப்.டி-க்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு சீரான இடைவெளியில் பணப் பு1ழக்கத்தையும் உறுதியான வட்டி வருமானத்தையும்- வழங்குகிறது.

மேலும், அவசரகால கார்பஸை உருவாக்கவும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், இரண்டு வருட காலவரையறை கொண்ட எஃப்.டி-க்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

Advertisment

இந்த நிலையில், 2 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நல்ல வட்டி வழங்கும் 10 வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள், ரூ.1 கோடிக்கும் குறைவான எஃப்.டி முதலீடுகளுக்கு பொருந்தும்.

வட்டியின் காலாண்டு கூட்டுத்தொகையின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்தத் திட்டங்கள் மூத்தக் குடிமக்களுக்கு பொருந்தாது. அவர்களுக்கு வங்கிகள் ஏற்கனவே பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளன.

பேங்க் ஆஃப் இந்தியா இரண்டு வருட எஃப்.டி-களுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.

இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக உயரும்.

ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

தனியார் துறை வங்கிகளில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.

இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக உயரும்.

ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) இரண்டு வருட FDகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக உயரும்.

கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இரண்டு வருட டெபாசிட்களுக்கு 6.85 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக உயரும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டு வருட டெபாசிட்களுக்கு 6.80 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.14 லட்சமாக உயரும்.

இந்தியன் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.14 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment