ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள், பெரும்பாலும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் ஸ்திரத்தன்மை உடன் காணப்படுகின்றன. முதலீட்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிலையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இது. அபாயங்களைத் தவிர்க்க விரும்பும் நபர்களை ஈர்க்கிறது. இந்த நிலையில், 20 வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
Advertisment
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் உள்பட 20 வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
வ.எண்
வங்கி பெயர்
அதிகப்பட்ச வட்டி விகிதங்கள் (%)
1 ஆண்டு வட்டி விகிதங்கள் (%)
5 ஆண்டு வட்டி விகிதங்கள் (%)
01
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.00
7.35
7.65
02
சூர்யதோய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.65
6.85
8.25
03
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
8.50
7.25
04
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
8.00
7.50
05
எஸ்பிஎம் வங்கி
8.25
7.05
7.75
06
இஏஎஸ்எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
6.00
6.25
07
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
8.25
7.50
08
ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.00
6.75
7.25
09
ஆர்பிஎல் வங்கி
8.00
7.50
7.10
10
டிசிபி வங்கி
8.00
7.15
7.40
11
பந்தன் வங்கி
7.85
7.25
5.85
12
இண்டஸ்இந்த் வங்கி
7.85
7.50
7.25
13
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
7.80
7.80
6.50
14
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி
7.75
6.50
7.00
15
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
7.40
6.20
6.00
16
பேங்க் ஆஃப் பரோடா
7.25
6.85
6.50
17
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.61
6.85
8.25
18
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
8.20
7.25
19
யெஸ் வங்கி
7.75
7.25
7.25
20
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.25
6.75
6.50
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத் துறையில் சாதகமான சலுகைகளை அனுபவிக்கின்றனர். வழக்கமான எஃப்டிகளுக்கு மாறாக, அவர்கள் டெபாசிட்களில் கூடுதலாக 50-80 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதங்கள் பெறுவார்கள்.
இது வருமானத்தில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும், குறிப்பாக நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு நல்ல வருமானம் கொடுக்கும். உதாரணமாக சாதாரண குடிமக்கள் 8 சதவீதம் வருமானம் பெற்றால், மூத்தக் குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வருமானம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“