kisan-vikas | post-office-scheme | புதிய ஆண்டில், தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு, முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸட் டெபாசிட்
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம். இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகள் டெபாசிட்களுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
நீங்கள் இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில அந்தப் பணம் ரூ.2,10,235 ஆக பெருகும்.
கிஷான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா (KVP) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்கள் தொகையை இரட்டிப்பாக்க உறுதியளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1000 மற்றும் ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
அதிகப்பட்ச முதலீட்டு வரம்பு இல்லை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நீங்கள் இதில் எத்தனை கணக்குகள் வேண்டும் என்றாலும் தொடங்கலாம்.
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. உங்கள் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பு ஆகும்.
முறையான முதலீட்டுத் திட்டம்
முறையான முதலீட்டுத் திட்டம் அதாவது SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். தொகை எப்போது இரட்டிப்பாகும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் SIP இல் மொத்தமாக 1,00,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 12 சதவிகித வருமானம் என்ற விகிதத்தில், இந்தத் தொகை 6 ஆண்டுகளில் 1,97,382 ரூபாயாக மாறும், இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்றால், 2,21,068 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் ரூ.2000 மாதாந்திர முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.2,40,000 முதலீடு செய்வீர்கள், மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 12 சதவீத வீதத்தில் சுமார் ரூ.4,64,678 கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“