Canara Bank | Home Loans | இன்றைய காலகட்டத்தில் ஹோம் லோன் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. வங்கியில் கடன் வாங்கியாவது ஒரு வீட்டை கட்டிக் கொள்ள வேண்டும் என பலரும் விரும்புகின்றனர்.
இந்தச் சூழலில் கனரா வங்கி உள்பட பல்வேறு வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.
கனரா வங்கி
கனரா வங்கி ரூ.30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.50%-11.25%, ரூ.30 லட்சத்துக்கும் மேலான மற்றும் ரூ.75 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.50%-11.25%, ரூ.75 லட்சத்துக்கும் அதிகமான கடனுக்கு 8.50%-11.25% வீதம் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, ரூ.30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.50%-10.00% வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
கர்நாடகா வங்கி
கர்நாடகா வங்கி ரூ.30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.50%-10.62%, ரூ.30 லட்சத்துக்கும் மேலான கடன் தொகைக்கு 8.50%-10.62%, ரூ.75 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு 8.50%-10.62% வீதம் வீட்டுக் கடன் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷன்ல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி 30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.45%-10.25% வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
யூகோ வங்கி
யூகோ வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் ரூ. 30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.45%-10.30% வட்டி விகிதம் வழங்குகிறது.
ஹெச்.எஸ்.பி.சி வங்கி
ஹெச்.எஸ்.பி.சி வங்கி ரூ.30 லட்சத்துக்கும் குறைவான, ரூ.30 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.75 லட்சத்துக்கும் குறைவான மற்றும் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமான வகைகளில் 8.45% வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடாவின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ரூ. 30 லட்சத்துக்குக் குறைவான கடன் தொகைக்கு 8.40%-10.65% வழங்குகிறது.
மகாராஷ்டிரா வங்கி
மகாராஷ்டிரா வங்கி 30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.35%-11.15% வட்டி விகிதம் வழங்குகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.30 லட்சத்துக்கும் குறைவான கடன் தொகைக்கு 8.40%-10.60% வட்டி விகிதம் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“