Advertisment

25 சதவீதம் வரை ரிட்டன்.. ரூ.100 முதல் முதலீடு செய்யலாம்; பெஸ்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்!

இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளன.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

சிறந்த லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதிகள் திட்டத்தில் லார்ஜ்கேப் ஃபண்டுகள், ஸ்மால் கேப் ஃபண்டுகளை விட பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன.

இந்தப் ஃபண்டுகள் தங்கள் பணத்தின் பெரும்பகுதியை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) வகைப்பாட்டின் படி, லார்ஜ்கேப் ஃபண்டுகள் 80 சதவீதம் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.

Advertisment

டாப் 5 லார்ஜ் கேப் ஃபண்டுகள்

திட்டம் ரிட்டன் (%) ரூ.10,000 எஸ்.ஐ.பி முதலீடு (5 ஆண்டுகள்)
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு 28.87% ரூ.12,20,370 
ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்டு 25.79% ரூ.11,34,128
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு 25.79% ரூ.11,33,882
பரோடா பி.என்.பி. பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டு 25.28% ரூ.11,20,298
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்டு 16.93% ரூ.11,09,056

இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ. 1,000 ஆகும், அதே சமயம் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.100 ஆகும். ஜனவரி 2013 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த நிதி 16.93 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.

பரோடா பி.என்.பி. பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்.ஐ.பி ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் ரூ.11,20,298 கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் ஐந்து ஆண்டுகளில் 25.28 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு ஐந்தாண்டு காலத்தில் எஸ்.ஐ.பி ஆண்டு வருமானம் 25.79 சதவீதத்தை இந்த நிதி வழங்கியுள்ளது. ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்டு ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 25.79 சதவீத வருடாந்திர SIP வருமானத்தை அளித்துள்ளது.

நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 28.87 சதவீத எஸ்ஐபி ரிட்டர்ன்களை வழங்கியுள்ளது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது. மேலும், இவை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் கருத்துக்கள் அல்ல.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment