ஒருவரின் பி.எஃப் கணக்கில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த வசதி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்த வசதி மூலம் இக்கட்டான சூழலில் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
இதில் படிவம் 31 அவசர நிலையின்போது பிஎஃப் திரும்ப பெற தேவைப்படுகிறது. அதேபோல் 10சி ஓய்வூதிய நன்மைக்கும், படிவம் 19 இறுதி பி.எஃப் தீர்வுக்கும் பயன்படும்.
கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- இபிஎஃப் போர்டலுக்கு செல்லவும்
- ஆன்லைன் சேவைகள் உரிமைக்கோரல் பிரிவுக்கு செல்லவும்
- உங்கள் வங்கிக் கணக்கின் 4 எண்களை கொடுத்து சரிபார்க்கவும்.
- பிஎஃப் அட்வான்ஸ் படிவம் 31ஐ தேர்ந்தெடுக்கவும்
- தேவையான தொகையை உள்ளீடவும்
- பின்பு முகவரியை உள்ளீடவும்
- ஆதார் ஓடிபி என்பதை க்ளீக் செய்யவும்
- கிடைக்க பெற்ற ஓடிபியை உள்ளீட்டு சமர்பிக்கவும்.
மேலும், பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. இதனால், கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட இந்தத் தொகையை கடன் என்பதை விட முன்பணம் என்பதே சரியானதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“