insurance | chennai-rain | மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் நீரில் மிதந்து வந்து, ஒன்றோடு ஒன்று மோதியதை பார்த்தோம்.
இந்தக் கார்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து காப்பீடு பெறலாம்.
ஆனால் அதற்கு சிலவற்றை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். முதலில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க கூடாது.
இதனால் உங்களின் காருக்கு உரிய இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் கூட போகலாம். ஆகவே முதலில் காரின் பாதிப்பு குறித்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும்.
அதன்பின்னர், க்ளைம் ஃபாம்-ஐ நிரப்பி அளிக்க வேண்டும். தொடர்ந்து மதிப்பீட்டாளர்கள் காரின் பாதிப்பு உள்ளிட்ட தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவார்.
இதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொறுத்து க்ளைம் மற்றும் பழுது நீக்குதல் மாறுபடும். அதை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டு அறிந்துகொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“