Home loans EMI burden | ஹோம் லோன் வட்டி விகிதங்கள் அதிகரித்துவரும் நிலையில், கடனாளிகள் தங்களின் இ.எம்.ஐ சுமையை குறைக்க பல்வேறு வழிகளை தேடிவருகின்றனர்.
நீங்கள் ஒரு வீட்டை வாங்கும் போது, ஒரு சாதகமான வட்டி விகிதத்தைப் பெற நினைக்கிறீர்கள். இது, புதிதாக வீடு வாங்குபவர்களுக்கும் முக்கியமானது.
சமீபத்தில், பெரும்பாலான நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதத்தை தாண்டியதால் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளன.
வட்டி விகிதங்கள் அதிகரிப்பால், மாதாந்திர இ.எம்.ஐ தொகையும் அதிகரிக்கிறது. இதனால், இ.எம்.ஐ கட்டுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்க வழிகளை தேடுகின்றனர்.
வட்டி விகிதங்களின் அதிகரிப்பு அச்சுறுத்தலாக இருந்தாலும், சிறந்த நிதித் திட்டமிடலின் மூலம் தங்கள் வீட்டுக் கடனை மறு கட்டமைக்க முடியும்.
இ.எம்.ஐ களைப் பற்றி கவலைப்படாமல், வீட்டு வாங்கும் இலக்கை அடைய, உங்கள் தற்போதைய கடன் கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது?
இது குறித்து பொருளாதார நிபுணர் ஒருவர், “நெருக்கடியான பட்ஜெட்டில் இருப்பவர்கள் மற்றும் கூடுதல் பணப்புழக்கம் இல்லாதவர்கள் இ.எம்.ஐ கட்டும் காலத்தை அதிகரித்து கேட்கலாம். இது ஏற்கனவே உள்ள இ.எம்.ஐ தொகைக்கு இணையான பேமண்ட்டுகளை தொடர்ந்து கட்ட உதவும்.
கூடுதல் பணப்புழக்கம் உள்ளவர்கள் கடனில் பகுதியளவை முன்கூட்டியே கட்டலாம். இதன் விளைவாக குறைந்த இ.எம்.ஐகள் கிடைக்கும். மேலும் கடன் காலத்தை மாற்றாமல் வைத்திருக்கும் அதே வேளையில் முந்தைய இ.எம்.ஐகளுடன் சமமாக இருக்கும்" என்றார்.
முன்கூட்டியே செலுத்துதல்
முன்கூட்டியே செலுத்துவது, கடன் காலம் மற்றும் ஒட்டுமொத்த வட்டி செலுத்துதல்களைக் குறைக்க உதவும். இருப்பினும், கடன் காலம் முடியும் தருவாயில் இருந்தால், முன்கூட்டியே செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்காது.
கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு பதிலாக கூடுதல் நிதியை முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“உதாரணமாக, 20 வருடங்களாக 7% வட்டியில் ரூ. 50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள். இப்போது, உங்களிடம் உபரி நிதி இருந்தால், ரூ.10 லட்சத்தை பகுதியாக முன்கூட்டியே செலுத்தினால், மீதமுள்ள கடன் தொகை ரூ.40 லட்சமாக இருக்கும்.
இந்த குறைக்கப்பட்ட கடன் தொகைக்கான இ.எம்.ஐ உங்களின் முந்தைய இ.எம்.ஐயை விட குறைவாக இருக்கும்.
உங்களின் முந்தைய இஎம்ஐ ரூ.38 ஆயிரத்து 765 என்று வைத்துக் கொண்டால், ரூ.10 லட்சம் பகுதி முன்பணம் செலுத்தினால், புதிய இ.எம்.ஐ. தோராயமாக ரூ.35 ஆயிரத்து 989 ஆக இருக்கும்.
இது முந்தைய இஎம்ஐயை விட குறைவாக இருப்பதோடு கடன் காலத்தை மாற்றாமல் வைத்திருக்கும். இது உங்களின் முந்தைய இஎம்ஐகளுடன் சமநிலையை பராமரிக்க உதவும்.
வீட்டுக் கடன் ஓடி-ஐத் தேர்ந்தெடுக்கவும்
வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட் (HLOD)வசதியைத் தேர்ந்தெடுப்பது வீத உயர்வுக்குத் தயாராவதற்கான மற்றொரு வழியாகும்.
இந்த வசதியின் மூலம், ஒருவர் உங்கள் வீட்டுக் கடன் கணக்குடன் இணைக்கப்பட்ட சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மொத்தத் தொகையை டெபாசிட் செய்யலாம்.
பணத்தை எச்எல்ஓடி கணக்கில் டெபாசிட் செய்வது, சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள உதவும். வைப்புத்தொகைகள் வீட்டுக் கடனுக்கான முன்பணம் அல்லது பகுதி-கட்டணமாக கருதப்படும் மற்றும் நிலுவையில் உள்ள நிகரத் தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.
7% வட்டியில் நடப்பு இ.எம்.ஐ-ஐத் தொடர மற்றொரு வழி தவணைக் காலத்தை அதிகரிப்பது. உங்கள் வீட்டுக் கடனின் காலத்தை அதிகரிக்கலாம்.
பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் கூடுதல் நிதி இல்லாத பட்சத்தில், இ.எம்.ஐ. கட்டுவதற்கான கடன் காலத்தை நீட்டிக்க கோரலாம்.
உதாரணமாக, 20 வருட காலத்திற்கு 7% வட்டி விகிதத்தில் ரூ. 30 லட்சம் வீட்டுக் கடன் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் இ.எம்.ஐ. சுமார் ரூ.38 ஆயிரமாக 765 ஆக இருக்கும். வட்டி விகிதம் 2% (7% முதல் 9% வரை) உயர்த்தப்பட்டுள்ளதால், உங்கள் இ.எம்.ஐ ரூ.44 ஆயிரத்து 986 ஆக அதிகரிக்கும்.
இந்த உயர்வைத் தவிர்க்க, உங்கள் இ.எம்.ஐ. ரூ. 38 ஆயிரத்து 765 ஆக வைத்துக்கொண்டு, கடன் காலத்தை 38 ஆண்டுகளாக நீட்டிக்கக் கோரலாம்.
இருப்பினும், இது ஒரு சிறந்த வழி அல்ல, ஏனெனில் இது ஒட்டுமொத்த வட்டி சுமையை அதிகரிக்கும். உங்கள் கடன் தொகைக்கு பெரிய வட்டி தொகையை செலுத்துவீர்கள்.
மேலும், பெரும்பாலான வங்கிகள் 30 ஆண்டுகளுக்கு மேல் கடன் காலத்தை நீட்டிப்பதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.