Public Provident Fund | Ppf | பி.பி.எஃப் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இதில், முதலீடு செய்வதற்கு குறிப்பிட்ட தொகை அல்லது முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.
இந்தத் திட்டத்தின் முதிர்வுக்காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யலாம்.
வரிச் சேமிப்புக் கண்ணோட்டத்தில் பிபிஎஃப் இல் முதலீடு செய்வதும் சிறந்தது. ஏனெனில் முதலீடு செய்யும் தொகைக்கும், பெறும் வட்டிக்கும் வரி கிடையாது.
வருமான வரியின் பிரிவு 80சி இன் படி, இந்தத் தொகைக்கு வரி இல்லை. இந்தியக் குடிமகனாக இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் யார் வேண்டுமானானும் பிபிஎஃப் அக்கவுண்டு ஓப்பன் செய்து அதில் முதலீடு செய்ய தொடங்கலாம்.
இந்தியாவில் வசிக்காதவர்கள் (என்ஆர்ஐ) அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கு (எச்யுஎஃப்) இந்தத் திட்டம் பொருந்தாது.
ஒருவர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் மற்றும் கூட்டு கணக்குகள் அனுமதிக்கப்படாது.
திறமையற்றவர் அல்லது மைனருக்காக ஒருவர் கூடுதல் பி.பி.எஃப் அக்கவுண்டை திறக்கலாம்.
என்பிஎஸ்
என்பிஎஸ் என்பது ஒரு தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இது குடிமக்கள் தங்கள் பணி வாழ்க்கையில் தங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கும் அரசாங்க திட்டமாகும்.
என்.பி.எஸ்-ல் உள்ள முதலீட்டில் அறுபது சதவீதத்தை ஓய்வு பெறும்போது எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
என்பிஎஸ் என்பது நிலையான வருமானம் தரும் முதலீடு அல்ல. என்பிஎஸ் மீதான வருமானம் சந்தை அபாயத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
பணியாளரின் சம்பளத்தில் 20 சதவீதம் வரை என்பிஎஸ்-ல் முதலீடு செய்யலாம். 18 முதல் 70 வயது வரை உள்ள எந்தவொரு இந்திய குடிமகனும் என்பிஎஸ் அக்கவுண்ட் திறக்ககலாம்.
ஆனால், இத்திட்டத்தில் தவறாமல் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம். திட்டத்தில் சேர்ந்து, தவறாமல் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் பலன்களைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அளவுகோல்கள் பின்வருமாறு:
1) நீங்கள் பிஓபி/பிஓபி-எஸ்பிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2) வாடிக்கையாளரை அறிய (KYC) கணக்கு வைத்திருப்பவர் தொடர்புடைய ஆவணங்களை வழங்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“