சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை டிச.31ஆம் தேதி ஒரு கிராம் ரூ.5,910 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இன்று (ஜன.4,2024) ஒரு கிராம் விலை ரூ.5820 ஆக சரிந்து விற்பனையாகி வருகிறது.
மற்றொரு ஆபரணமான வெள்ளியும் அதே நிலையில் காணப்படுகிறது. டிச.31ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.80 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் வெள்ளி விலை
இந்த நிலையில் தற்போது கிராமுக்கு ரூ.2 என கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் வரை சரிந்து காணப்படுகிறது. இன்று கிராம் வெள்ளி ரூ.78 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.78 ஆயிரமாகவும் உள்ளது.
நேற்று கிராம் வெள்ளி ரூ.77.80 என உச்சப்பட்சமாக சரிந்து காணப்பட்டது.
தங்கம் அதிகப்பட்சமாக இன்று சரிந்து காணப்படுகிறது. 24 காரட் தூயத் தங்கம் ரூ.6290 ஆக காணப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை குறைவுக்கு பல்வேறு காரணிகள் பார்க்கப்படுகின்றன.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை (10 கிராம்)
1. டெல்லி Rs.63970
2. மும்பை Rs.63820
3. கொல்கத்தா Rs.63820
ஏப்ரல் 2024 எம்சிஎக்ஸ் ஃபியூச்சர்ஸ் தங்கம் 10 கிராமுக்கு ரூ.62633.0 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது, இது வெளியிடப்பட்ட நேரத்தில் 0.205% அதிகரித்து.
வெள்ளி மார்ச் 2024 எம்சிஎக்ஸ் ஃபியூச்சர்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.72390.0 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது, இது வெளியிடும் போது 0.051% குறைந்துள்ளது.
பாதிப்பு ஏன்?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், மதிப்புமிக்க நகை வியாபாரிகளின் உள்ளீடு, உலகளாவிய தங்கத்தின் மீதான ஆசை, நாணய மதிப்புகளில் உள்ள மாறுபாடுகள், தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் அரசாங்க விதிகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளால் பாதிக்கப்படுகிறது.
உலகப் பொருளாதார நிலைகளும், அமெரிக்க டாலரின் வலிமையும் இந்திய சந்தையில் தங்கத்தின் விலையை பாதிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“