குறைந்த பிரீமியம்… ரூ4 லட்சம் வரை ரிட்டன்..! உங்ககிட்ட ஆதார் இருந்தா மட்டும் அப்ளை பண்ணுங்க!

Banking news in Tamil, Lic aadhar stambh policy scheme explained in tamil: எல்.ஐ.சி யின் ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது, குறிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு ஒரு லாப நோக்கமற்ற எண்டோவ்மெண்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். ஒரு வேளை பாலிசிதாரர் பாலிசி காலம் முடிவடைவதற்குள் அகால மரணமடைய நேர்ந்தால், பாலிசிதாரரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். இதனால் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்கும் திட்டமாக உள்ளது. மேலும் இத்திட்டம் காப்பீடு, விபத்துக் காப்பீடு, பாலிசியின் பேரில் கடன் பெறும் வசதி போன்ற வசதிகளை கொண்டது.

ஆதார் ஸ்டாம்ப் (திட்டம்-943) என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கொண்டுவந்துள்ளது. ஆதார் அட்டை உடைய ஆண்களுக்கான சிறிய சேமிப்பு திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது.

ஆதார் ஸ்டாம்ப் எல்.ஐ.சி பற்றிய விவரங்கள்;

எல்.ஐ.சி யின் ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது, குறிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு ஒரு லாப நோக்கமற்ற எண்டோவ்மெண்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். ஒரு வேளை பாலிசிதாரர் பாலிசி காலம் முடிவடைவதற்குள் அகால மரணமடைய நேர்ந்தால், பாலிசிதாரரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். இதனால் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்கும் திட்டமாக உள்ளது. மேலும் இத்திட்டம் காப்பீடு, விபத்துக் காப்பீடு, பாலிசியின் பேரில் கடன் பெறும் வசதி போன்ற வசதிகளை கொண்டது.

இத்திட்டத்தை வாங்குவதற்கான தகுதிகள்:

8 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.

பாலிசி முதிர்வடையும் போது 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குறைந்தப்பட்ச காப்பீட்டு தொகை ரூ.75000 அதன் பின்னர் ரூ.5000

அதிகப்பட்ச காப்பீட்டு தொகை ரூ.3 லட்சம்.

பாலிசி காலம் : 10 – 20 ஆண்டுகள்

இத்திட்டத்தில் சேருபவர் 20 ஆண்டுகள் கழித்து தோராயமாக ரூ.4 லட்சம் முதிர்வு தொகையாக பெறலாம். காப்பீட்டு தொகை ரூ.3 லட்சத்திற்கு கூடுதலாக ரூ.97500 மற்றும் 4.5% வட்டியும் கிடைக்கும்.

இறப்பு உரிமம்:. நிலுவையில் உள்ள பாலிசிதாரர் 5 ஆண்டுகளுக்குள் இறந்தால் காப்பீட்டு தொகை மட்டும் கிடைக்கும்.

ஐந்து ஆண்டுகள் பாலிசி நிறைவடைந்தபின், ஆனால் முதிர்வு தேதிக்கு முன்னதாக இறப்பு ஏற்படின் காப்பீட்டு தொகை மற்றும் விசுவாச பங்களிப்பு தொகை கிடைக்கும்.

முதிர்வு உரிமம்: காப்பீட்டாளர் பாலிசி காலத்தை தக்க வைத்து இருந்தால் முதிர்வு தொகையானது மொத்த தொகை மற்றும் விசுவாச பங்களிப்புடன் கிடைக்கும். பாலிசிதாரர் தீர்வு விருப்பத்தின் ஒரு பகுதியாக தவணைகளில் முதிர்வு நன்மையைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lic aadhar stambh scheme explanation in tamil

Next Story
ரூ.55 பிரீமியம்… மாதம்தோறும் ரூ.3000 பென்ஷன்! மத்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்தீர்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com