/tamil-ie/media/media_files/uploads/2022/08/LIC-IPO-REUTERS-1200.jpeg)
அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் எல்.ஐ.சி 98 வது இடத்தை பிடித்துள்ளது.
பங்குச்சந்தை பட்டியலின்படி, உலகத்தில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலை பார்ச்சுன் என்ற அமைப்பு எல்லா ஆண்டும் வெளியிட்டு வருகிறது. உலகளவில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி 98 வது இடத்தை பிடித்துள்ளது. எல் ஐ சி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 97.26 பில்லியன் யுஎஸ்டி, மற்றும் இதன் லாபம் 553.8 மில்லியன் யுஎஸ்டி. ரிலையன்ஸ் நிறுவனம் 51 இடங்கள் முன்னேக்கி சென்று தற்போது 104 இடத்தை பிடித்துள்ளது. ரியலையன்ஸ் நிறுனத்தின் வருவாய் 93.98 பில்லியன் யுஎஸ்டி, மற்றும் இதன் லாபம் 8.15 பில்லியன் யுஎஸ்டி. மேலும் இந்த தரவரிசை பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதில் 5 பொதுத்துறை நிறுவனங்கள். மேலும் 4 தனியார் நிறுவனங்கள். எல்ஐசி நிறுவனம் மற்ற இந்திய நிறுவனங்களைவிட முன்னிலையில் உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் 142 இடத்திலும், ஓஎன்ஜிசி 190 வது இடத்திலும் இருக்கிறது. ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா 236 இடத்தையும். பாரத் பெட்ரோலியம் 295 இடத்தையும் பிடித்துள்ளது. அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.