எல்ஐசியில் பாலிசி வைத்திருக்கும் உங்களுக்கு இந்த செய்தி!

பாலிசி ஹோல்ட் போன்ற தகவல்களை குறுஞ்செய்தி மூலமே எல்ஐசி நிர்வாகம் அனுப்பும்.

பாலிசி ஹோல்ட் போன்ற தகவல்களை குறுஞ்செய்தி மூலமே எல்ஐசி நிர்வாகம் அனுப்பும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Schemes, LIC Policies

LIC Policies to be closed

ஒருவருடைய எல்ஐசி பாலிசி முடியும் தருவாயில் இருக்கிறது எனில், உடனடியாக அவர் வங்கிக் கணக்கை தன்னுடைய பாலிசியுடன் இணைத்ததாக வேண்டும். அப்படி இணைக்கவில்லை எனில், அவருடைய பணப் பரிமாற்றம் நிறுத்தப்படும்.

Advertisment

இதுவரையில் , காசோலை மூலமே எல்ஐசி பணம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக பணம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இதனால் தான் வங்கிக் கணக்கை ஒருவர் தன்னுடைய பாலிசியுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகிறது. அப்படி இணைக்கவில்லை எனில், அவர்களால் பணத்தை பெற முடியாமல் போய் விடும்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கையை எல்ஐசி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதன் மூலம், ஒருவருடைய பாலிசி மெச்சூர் ஆன பிறகு, அவருடைய பணம் நேரடியாக அவரின் வங்கிக் கணக்கிற்கே வந்து சேரும். இதுவரை இணைப்பு செய்யாத வாடிக்கையாளர்களின் பணத்தை எல்ஐசி நிறுத்தி வைத்துவிட்டது.

இந்நிலையில் இந்த இணைப்பு குறித்த தகவலை எல்ஐசி குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகிறது.

Advertisment
Advertisements

இதுவரை எல்ஐசி வாடிக்கையாளர்கள், தம்முடைய மொபை எண்ணை எல்ஐசி பாலிசியில் சேர்க்கவில்லை எனில், அதையும் உடனடியாக சேர்த்துவிட வேண்டும்.. ஏனெனில், வரும் மார்ச் 1, 2019 முதல் பாலிசி ப்ரீமியம், பாலிசி மெச்சூரிட்டி, பாலிசி ஹோல்ட் போன்ற தகவல்களை குறுஞ்செய்தி மூலமே எல்ஐசி நிர்வாகம் அனுப்பும்.

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: