Advertisment

வீடு வாங்கும் ஐடியாவில் இருக்கீங்களா? அப்படியே எல்ஐசி பக்கம் கொஞ்சம் வாங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடு வாங்கும் ஐடியாவில் இருக்கீங்களா? அப்படியே எல்ஐசி பக்கம் கொஞ்சம் வாங்க

LIC Housing Finance 2020 வீட்டுகடன் சலுகைகள் : கடந்த பல மாதங்களாக மந்த நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக LIC Housing Finance Limited (LIC HFL) ஒரு வீட்டு கடன் சலுகையை அறிவித்துள்ளது. LIC HFL ‘2020 வீட்டு கடன் சலுகையில் இரண்டு முக்கிய ஈர்ப்பு புள்ளிகள் உள்ளன. ஒன்று நீங்கள் குடியேரும் போது பணம் செலுத்தும் வசதி (Pay when you stay), மற்றொன்று 6 தவனைகள் (EMIs) தள்ளுபடி.

Advertisment

இந்த சலுகையின் படி, ஒரு வீடு வாங்குபவர் அந்த வீட்டை சொந்தமாக்கும் வரை கடனுக்கான அசல் தொகையை மட்டும் கட்டினால் போதும்.

எஸ்.பி.ஐ-யின் இமாலய சாதனை... பிரமிப்பு தான்!

இத்துடன், குடியேருவதற்கு தயாராக உள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு LIC HFL கூடுதல் நன்மைகளை வழங்குகிறது அதாவது 6 தவனைகள் கடன் காலத்தில் தள்ளுபடி வழங்கப்படும். கடன்வாங்கியவருக்கு கடன் காலத்தில் இரண்டு தள்ளுபடிகள் வீதம் 5, 10 மற்றும்15ஆம் ஆண்டு முடிவுகளில் வழங்கப்படும். எனினும் இந்த சலுகையை பெற கடன்வாங்கியவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாத பின்புலம் இருக்க வேண்டும்.

Pradhan Mantri Awas Yojana – Credit Linked Subsidy Scheme (PMAY-CLSS) கீழ் கடனுக்கான செயலாக்க கட்டணம் (processing fee) பொருந்தும். ஒரு கோடி வரையிலான தொகைக்கு செயலாக்க கட்டணம் கடன் தொகையின் 0.25 சதவிகிதம் அதிகபடசமாக ரூபாய் 10,000/- உட்பட்டது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ரூபாய் 5 கோடி வரை கடன் தொகையில் 0.25 சதவிகிதம் அதிகபட்சமாக ரூபாய் 25,000/- வரை.

வீடு கட்டணுமா... எச்.டி.எஃப்.சியின் இந்த சூப்பர் அறிவிப்பை கேட்டுட்டு போங்க!

இதில் மிகவும் கவர்சிகரமான அம்சம் என்னவென்றால் நீங்கள் LIC HFL ஆப் மூலம் விண்ணப்பித்தால் நீங்கள் ரூபாய் 4,000/- க்கான வவுச்சரை கடன் வழங்கும் போது பெறுவீர்கள். குறைந்தபட்ச கடன் தொகை ரூபாய் 20 லட்சமாகவும் அதிகபட்ச கடன் தொகை 200 லட்சங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LIC HFL ன் படி, 200 லட்சத்துக்கும் அதிகமான கடன் தொகையை ஒரு தனிப்பட்ட கடன் கணக்கு மூலம் பெறலாம். வீடு, அடுக்குமாடி குடியிருப்பு அல்லது கட்டப்படும் வீடு/அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்காக மட்டும் தான் கடன் பெறு முடியும் என LIC HFL கடனுக்கான நோக்கமாக குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment