Advertisment

மீண்டும் மாற்றியமைக்கப்பட்ட எல்.ஐ.சி. ஹோம் லோன் வட்டி? செக் பண்ணுங்க!

சிபில் ஸ்கோர் 800க்கு மேல் உள்ள மாத சம்பளம் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ரூ.15 கோடி வரை வீட்டுக் கடன், 8 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how much extra interest you will pay on home personal and car loan EMIs

உயரும் பணவீக்கத்தை சமாளிக்க ரெப்போ விகிதம் முன்பு 5.9 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

LIC Housing Finance home loan interest rates: எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன்களுக்கான முதன்மைக் கடன் விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், வீட்டுக் கடனுக்கான புதிய வட்டி விகிதங்கள் 8 சதவீதத்தில் இருந்து தொடங்கும். முன்னதாக, இது 7.50 சதவீதமாக இருந்தது.

Advertisment

எல்ஐசி ஹவுசிங் இணையதளத்தின்படி, சிபில் ஸ்கோர் 800க்கு மேல் உள்ள மாத சம்பளம் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ரூ.15 கோடி வரை வீட்டுக் கடன், 8 சதவீத வட்டியில் வழங்கப்படும்.

சிபில் ஸ்கோர் 750 முதல் 799 வரை உள்ளவர்களுக்கு, ரூ.5 கோடி வரை வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.05 சதவீதமாக இருக்கும். ரூ.5 கோடிக்கு மேல் ரூ.15 கோடிக்கு குறைவாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 8.40 சதவீதம் வட்டியை வசூலிக்கும்.

700 முதல் 749 வரையிலான சிபில் ஸ்கோருக்கு, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ரூ. 50 லட்சம் வரை 8.20 சதவீதமும், ரூ. 50 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு 8.40 சதவீதமும் வழங்குகிறது.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் இரண்டு மாதங்களில் வட்டி விகிதத்தை உயர்த்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகஸ்ட் 22 அன்று பிரைம் லென்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது.

வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான சமீபத்திய முடிவு ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவிற்கு சற்று முன்னதாக வந்துள்ளது.

இதற்கிடையில், பணவீக்கத்தை குறைக்க மத்திய வங்கி மீண்டும் ஒருமுறை பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி கடந்த மூன்று பாலிசி தொடர்பான கூட்டங்களில் ரெப்போ விகிதத்தை 140 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்தது. அந்த வகையில், மே மாதத்தில் 40 பிபிஎஸ், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 50 பிபிஎஸ் உயர்த்தியது. ரெப்போ வட்டி விகிதத்தின் சமீபத்திய உயர்வு ஆகஸ்ட் 5 அன்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment