scorecardresearch

முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்

1 வருட காலத்திற்கான வட்டி விகிதம் ரூ.20 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கு 7 சதவீதமும், ரூ.20 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு 6.75 சதவீதமும் ஆகும்.

Tamil news
Tamil news Updates

எல்.ஐ.சி., ஹவுசிங் ஃபைனான்ஸ் அதன் பொது வைப்பு வட்டி விகிதங்களை 10-65 அடிப்படை புள்ளி உயர்த்தியுள்ளது. இது 2022 டிசம்பர் 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனால், டிசம்பர் 26 முதல், எல்ஐசி ஹவுசிங் 18 மாத காலத்திற்கு பொது வைப்புத் தொகையான ரூ.20 கோடிக்கு ஆண்டுதோறும் 7.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும்.

அதே நேரத்தில் ரூ.20 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும். 1 வருட காலத்திற்கான வட்டி விகிதம் ரூ.20 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கு 7 சதவீதமும், ரூ.20 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு 6.75 சதவீதமும் ஆகும்.

மேலும், இரண்டு வருட காலத்திற்கான விகிதங்கள் 20 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.35 சதவீதமும், 20 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு 7 சதவீதமும் ஆகும்.

தொடர்ந்து, தற்போது முறையே 20 கோடி மற்றும் 2 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு முறையே 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.50 சதவீதம் மற்றும் 7.25 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Lic housing finance public deposit rate hiked

Best of Express