அரசுக்குச் சொந்தமான நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்ற காப்பீட்டு நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தை, முக்கியமாக ஓய்வூதியத்தையும் பாதுகாக்கிறது. மேலும், வரிச் சேமிப்புக்கான விருப்பங்களையும் வழங்குகின்றன.
எல்.ஐ.சி ஜீவன் அக்ஷய் திட்டம்
இந்த நிலையில், எல்ஐசியின் ஜீவன் அக்ஷய் திட்டம் மற்ற திட்டங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில் இந்தத் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும் மாதம் ரூ.20 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம்.
மேலும் இந்த வருமானத்தை பயனாளிகள் மாதம், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தை 30 முதல் 85 வயது வரை உள்ள தனிநபர்கள் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் பிரீமியம் செலுத்தி முதலீடு செய்துக் கொள்ளலாம்.
குறைந்தப்பட்ச பாலிசி தொகை
ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 12,000 ஆகும். மேலும், இந்தப் பாலிசி ஒற்றை வாழ்க்கை மற்றும் கூட்டு வாழ்க்கைக் கொள்கை என இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கிறது.
இதுமட்டுமின்றி பாலிசியில் கடன் வாங்கும் வசதியும் உள்ளது. ஒருவர் பாலிசி பெற்ற 90 நாள்களுக்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளலாம்.
மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் பெற எடுக்க வேண்டிய பாலிசி ரூ.40 லட்சம் 72 ஆயிரம் ஆகும்.
இத்திட்டம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து, மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/