Advertisment

எல்.ஐ.சி.யின் ’ஜீவன் அமர் பிளான்’: பெண்களுக்கு என்ன பயன் தெரியுமா?

பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகையை (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lic jeevan amar

lic jeevan amar

LIC Jeevan Amar : எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய டெர்ம் பாலிசியான ’ஜீவன் அமர் பிளான்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகையை (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்

Advertisment

இந்தியாவில் ஆயுள் காப்பீடு என்பதே ஒரு முதலீடாக நீண்ட நாட்களாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் டெர்ம் பாலிசியில் அதிகம் கவனம் செலுத்தி வருவது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்திய காப்பீடு திட்டத்தின் பெயர் தான் ஜீவன் அமர் பிளான்’ நீங்கள் இந்த பாலிசில் இணைய பாலிசி முகவர்களை தொடர்புக் கொள்ளலாம்.

மற்ற காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டமான பாலிசிதாரர்களுக்கு கூடுதல் பலன்களையும் அதிகப்படியான லாபத்தை அளிக்கக்கூடியது.

நடைமுறைகள்: lic jeevan amar plan!

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும். இதில் இரண்டு வகையான மரணத்திற்கு பின்பு கையில் வரும் பணம் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினி பணத்தை மொத்தமாகவோ 5 அல்லது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தோ வாங்கிக் கொள்ளலாம் (மொத்தமாக வாங்கி செலவழித்து விடாமல் 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது)

சிறப்பம்சங்கள்:

1.

இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்

2. இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம்

3. இப்பாலிசிகள் Accidental Rider, புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன.

4. மற்ற எல்லா பாலிசிகளையும் போல பெண்களுக்கான ப்ரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 50 லட்சம். அமரில் 25 லட்சம்

பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகையை (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment